வாழ்வாதாரம் இழந்த 100 ஆட்டோ சாரதிகளுக்கு நிதி உதவு வழங்கிய தியாகி வாமேந்திரன்
#SriLanka
#Aid
#Thiyagendran Vamadeva
Prasu
10 months ago
மேல் மாகாணத்தில் ஆட்டோ தொழிலில் தங்களது வாழ்வாதாரத்தை பெற்று வாழும் மூவின ஆட்டே ஓட்டுனர்கள் 100 பேருக்கு தலா 10000 ரூபா நிதி உதவி வழங்கும் நிகழ்வு கொழும்பு BMICH இல் இடம் பெற்றது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த சமூக சேவையாளர் தியாகி வாமேந்திரன் அவர்களின் சொந்த நிதியிலிருந்து குறித்த உதவிகள் வழங்கப்பட்டிருந்தது.

மனித உரிமைகள் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் விருது வழங்கும் நிகழ்வில் வைத்து இந்நிதி இவ்வமைப்பின் பிரதித் தலைவர் எப்.எம். வ ஷரீக் அவர்களினால் ஆட்டோ உரிமையாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்