தமிழரசின் மூத்த தலைவருக்கு அஞ்சலி மரியாதை
#SriLanka
Mayoorikka
10 months ago
நேற்றையதினம் மறைந்த, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு உயர் மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கட்சியின் பொருளாளர் பெரியதம்பி கனகசபாபதி ஆகியோரால் இன்று காலை அன்னாரது புகழுடலுக்கு கட்சிக் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.


பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்