அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு!

#SriLanka #rice
Mayoorikka
6 months ago
அரசாங்கத்தினால்  இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு!

அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 5,200 மெற்றிக் டன் அரிசியை ஏற்றிய முதலாவது கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது என வர்த்தக அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

 குறித்த கப்பல் கடந்த 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசியை விநியோகிக்கும் பணிகள் நேற்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது.

 இறக்குமதி செய்யப்படும் அரிசியை விரைவாக துறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்காக உணவு பரிசோதகர்கள் மற்றும் ஆலை தனிமைப்படுத்தல் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் விசேட முறையொன்றை நடைமுறைப்படுத்த சுங்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

 தனியார் துறையினர் அரிசியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது. 

 இதன்படி கடந்த 20ஆம் திகதி வரை 67,000 மெற்றிக் டன் அரிசியை தனியார் துறையினர் இறக்குமதி செய்திருந்தனர். அதில் 38,500 மெற்றிக் டன் நாடு அரிசியும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!