இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை!
இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பழைய இருப்பிடங்களில் மீளக் குடியமர்த்துவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் இது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும்மேலும் தெரிவித்தார்.
அவர் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க ரூ.10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்துவிட்டதால், இழப்பீட்டை ரொக்கமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும், சமீபத்திய புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
