கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் அடையாளம்!
#SriLanka
Mayoorikka
1 hour ago
கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோயாளி ஒருவர் இன்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார். கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராமத்தில் வசிக்கும் ஒருவரே எலிக்காய்ச்சல் நோயாளியாக அடையாளம் காணப்பட்டார்.
குறித்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது இவரின் குருதி மாதிரி பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு எலிக்காய்ச்சல் இருப்பது இனங்காணப்பட்டது.
(வீடியோ இங்கே )
அனுசரணை
