இராணுவத்திடம் காணி இருந்தால் அறியத்தாருங்கள்! காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு

#SriLanka
Mayoorikka
11 months ago
இராணுவத்திடம்  காணி இருந்தால் அறியத்தாருங்கள்! காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு

முப்படையினரின் வசம் தங்களின் காணிகள் இருக்குமாயின் அது குறித்த உரிய தகவல்களை அறியத்தருமாறு வமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் பொதுமக்களிடம் கோரியுள்ளார். 

 நேற்று வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், முப்படையினரின் வசம் உள்ள காணிகளை மக்களுக்காக விடுவிப்பதற்கு படைகளின் ஆளணித்துவத்தை குறைக்க வேண்டும்.

 மேலும், வடக்கு மக்களுக்கு நாங்கள் தெரிவிப்பதாவது, உங்களுடைய சொந்த காணிக்குள் இராணுவ படைமுகாம் இருக்குமாயின் எமக்கு தகவல் தாருங்கள். இது தொடர்பிலான முழுமையான தகவல்களை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

 மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் காணி அமைச்சரை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை காணி உரிமைக்கான மக்கள் அமைப்பு மேற்கொண்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, உரிய தரவுகள் இருக்குமாயின் எமக்கு காணி பிரச்சினைக்கு தீர்வு காணுவது தொடர்பில் கலந்துரையாடுவோம் என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை