களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை!

#SriLanka #water
Thamilini
11 months ago
களுத்துறை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு நீர் விநியோகம்  தடை!

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொரோந்துடுவ மற்றும் பொம்புவல ஆகிய பகுதிகளுக்கு 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. 

 இதன்படி இன்று (26) காலை 09 மணி முதல் நாளை  (27) அதிகாலை 03 மணி வரை குறித்த பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

 பிரதான கடத்தும் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசர திருத்த வேலைகளுக்காக இந்த நீர் விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை