வெல்லவ பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#GunShoot
Thamilini
11 months ago
வெல்லவ, மரலுவாவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 32 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார்.
தம்பதியினர் தங்கள் வீட்டிற்குள் இருந்தபோது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் மற்றும் சந்தேகநபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.