அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்!
#SriLanka
#government
Thamilini
11 months ago
அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாங்கள் விரும்பினால், இப்போது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று நாங்கள் கூறியிருக்கலாம்.
இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மக்கள் படும் கஷ்டங்கள் எங்களுக்கு தெரியும். சம்பள உயர்வை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
அந்த விவரங்களை பட்ஜெட்டில் தாக்கல் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.