சமூக-பொருளாதார மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

#SriLanka
Thamilini
11 months ago
சமூக-பொருளாதார மேம்பாடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை பத்திரம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

 ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2371 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது. 

 இதன்படி, கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய துறைகள் இத்திட்டத்தின் மூலம் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 இதன் கீழ் 33 செயற்திட்டங்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இதன் ஊடாக கிழக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் என்பவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகறிது. 

 இதன்படி, கல்விக்காக 315 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 780 மில்லியன் ரூபாவும், விவசாயத்திற்கு 620 மில்லியன் ரூபாவும், மீன்பிடிக்காக 230 மில்லியன் ரூபாவும் உட்பட 33 திட்டங்களுக்கு 2371 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்கவுள்ளது. 

 அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை