இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!
#SriLanka
Thamilini
11 months ago
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.