அடுத்த (2025) ஆண்டு முதல் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்க திட்டம்!
#SriLanka
Thamilini
11 months ago
இலங்கையில் பொதுத்துறையை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் எதிர்வரும் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் என இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த நாட்டில் பாரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த வருடத்தில் இருந்து எமது நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு தயாராக்கி வருகின்றோம்.
மேலும் க்ளீனிங் ஸ்ரீலங்கா என்ற திட்டத்தை எமது நாட்டில் ஆரம்பிக்க தயாராகி வருகின்றோம்.