பிரான்சில் பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு - இருவர் மரணம்

#Death #France #GunShoot
Prasu
11 months ago
பிரான்சில் பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு - இருவர் மரணம்

பல்பொருள் அங்காடி ஒன்றின் வாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். 

Seyne-sur-Mer (Var) நகரில் இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. பல்பொருள் அங்காடி ஒன்றின் வாசலில் காத்திருந்த இருவரை நோக்கி ஆயுததாரிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 29 வயதுடைய ஒருவரும், வயது குறிப்பிடப்படாத ஒருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர்.

ஆயுததாரிகள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் அழைக்கப்பட்டு, அவர்கள் வந்தடைந்த போது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.

 சம்பவம் தொடர்பில் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!