பதுங்கு குழிகளே வாழ்க்கையாகிப் போன அவலம் - இஸ்ரேல் மக்களின் தற்போதைய நிலை!

#America #people #world_news #Israel #War #Iran #Iraq #ImportantNews #Public #SHELVAFLY #L4 #IranVsIsrael
Lakhi
3 months ago
பதுங்கு குழிகளே வாழ்க்கையாகிப் போன அவலம் - இஸ்ரேல் மக்களின் தற்போதைய நிலை!

இஸ்ரேலில் நிலவும் தற்போதைய போர்ச் சூழல் மற்றும் அங்குள்ள மக்களின் அன்றாட வாழ்க்கை முறை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் மக்கள் தற்போது அபாய ஒலிகள், பதுங்கு குழிகளை நோக்கி ஓடுதல், ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளின் இடைமறிப்புகள் போன்றவற்றுடனான ஒரு சவாலான வாழ்க்கை முறைக்கு பழகி வருகின்றனர்.

ஏவுகணைத் தாக்குதல்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக தீப்பரவல்கள் ஏற்படுவதும், பின்னர் நிலைமை சீராவதும் மீண்டும் அதே சுழற்சி தொடர்வதுமாக அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மாறியுள்ளது.

குறிப்பாக நாட்டின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்கள், 24 மணிநேரமும் இத்தகைய பதற்றமான சூழலிலேயே உள்ளனர்.

ஒருமுறை பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்து நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்குள், அடுத்த அபாய ஒலி கேட்டு மீண்டும் ஓட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது அங்குள்ள மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் சோர்வுக்குள்ளாகியுள்ளது.

இயல்பு நிலையை ஓரளவுக்காவது கொண்டு வர முயற்சிக்கும் இஸ்ரேலிய அரசாங்கம், "போக்குவரத்து சமிஞ்சைப்போன்ற ஒரு நிறக் குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அச்சுறுத்தல் நிலையைப் பொறுத்து பாடசாலைகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது இதன் நோக்கமாகும்.

இருப்பினும், இந்த நடைமுறைக்கு உள்ளூர் முதல்வர்களிடையே போதிய வரவேற்பு இல்லை.

"எங்கள் பகுதிகளில் பாடசாலைகளைத் திறக்கத் தயாராக இல்லை" என்று பல உள்ளூர் தலைவர்கள் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.

பல பாடசாலைகளில் அவசர காலங்களில் ஓடிச் சென்று தஞ்சமடையக்கூடிய முறையான வான் பாதுகாப்புத் தளங்கள் அருகாமையில் இல்லாமைக் காரணமாகவே, பல பாடசாலைகளைத் திறப்பதில் சவால் எழுந்துள்ளது.

இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும், இஸ்ரேலிய மக்கள் மற்றும் அந்த நாடு ஒட்டுமொத்தமாக இந்தப் போருக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4