மத்திய கிழக்கு போர் - துபாயில் இருந்து மும்பை வந்த நடிகை லாரா தத்தா

#India #Actress #TamilCinema #War #Middle East #L4
Prasu
3 months ago
மத்திய கிழக்கு போர் - துபாயில் இருந்து மும்பை வந்த நடிகை லாரா தத்தா

2000ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற லாரா தத்தா பின்னர் திரை உலகிற்கு வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். 

இவர் தமிழில் அரசாட்சி என்னும் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். 

திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின் மீண்டும் பெல்பாட்டம் என்ற படத்தின் மூலம் அக்சய் குமாருடன் மீண்டும் நடித்தார்.

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. 

இந்நிலையில், சுமார் 12 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, வான்வழி போக்குவரத்து சீரானதை அடுத்து, துபாயிலிருந்து நடிகை லாரா தத்தா இந்தியா திரும்பியுள்ளார்.

தான் ஒரு ஸ்டுடியோவில் இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகவும், மேலே இருந்து ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாகவும் நடிகை லாரா தத்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4