அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவை பதவிநீக்கக் கோரி மனுத்தாக்கல்!

#SriLanka #Court
Thamilini
11 months ago
அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகேவை பதவிநீக்கக் கோரி மனுத்தாக்கல்!

கிராம அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே நாடாளுமன்ற உறுப்பினராக (MP) தகுதியற்றவர் எனக் கூறி ரிட் மனுவொன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ரிட் மனுவின் படி, அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டு பின்னர் அமைச்சரவை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டபோது அவர் ருஹுணு பல்கலைக்கழகத்தில் பணியாளராக இருந்ததால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். 

கலாநிதி உபாலி பன்னிலகே, பொதுக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாக இருப்பதால், நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கோ அல்லது அரசியலமைப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிப்பதற்கோ தகுதியற்றவர் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை