அரச மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல்!
#SriLanka
#doctor
Thamilini
11 months ago
அரச மருத்துவர்களின் ஓய்வு பெறும் வயதை 63 ஆக நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி இந்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் ஓய்வு பெற இருந்தவர்கள், 63 வயது வரை தங்களது கடமையை தொடரமுடியும்.
அனைத்து மருத்துவ அலுவலர்கள், அனைத்து தர மருத்துவ அலுவலர்கள், சிறப்பு பல் சுகாதார நிபுணர்கள், அனைத்து பல் சுகாதார நிபுணர்கள், அனைத்து நிர்வாக தர மருத்துவ அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசு பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களுக்கும் இந்த விதி பொருந்தும்.