முல்லைத்தீவில் கரையொதுங்கிய பலநாள் மீன்பிடி படகு : நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் பிரஜைகள் மீட்பு!

#SriLanka #Mullaitivu
Thamilini
11 months ago
முல்லைத்தீவில் கரையொதுங்கிய பலநாள் மீன்பிடி படகு : நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் பிரஜைகள் மீட்பு!

100க்கும் மேற்பட்ட மியான்மர் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு பலநாள் கப்பல் ஒன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கரையை வந்தடைந்துள்ளதாக முல்லைத்தீவு, கடற்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

 மியான்மரில் இருந்து பல நாள் படகு மூலம் அகதிகளாக வேறு நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லும் போதே இவர்கள் முள்ளிவாய்க்கால் கரையை அடைந்ததாக கூறப்படுகிறது. 

 குறித்த மீன்பிடி கப்பலில் பயணித்த மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் இல்லாத காரணத்தினால் அது முள்ளிவாய்க்கால் கரையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

 கப்பலில் உள்ள மக்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை கடற்படையினர் வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு என்ன செய்வது என்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். 

 குறித்த கப்பலில் ஏறக்குறைய 25 சிறுவர்கள் இருந்ததாக தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை