CEB ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படமாட்டாது!
#SriLanka
#Electricity Bill
Dhushanthini K
8 months ago

ஆளும் கட்சியுடன் இணைந்த இலங்கை மின்சார ஊழியர் சங்கம் கோரிய போதிலும், இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை தனது ஊழியர்களுக்கான போனஸை இந்த ஆண்டு அங்கீகரிக்கவில்லை என தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் இந்த ஆண்டு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
முன்னதாக, அவர் அரசாங்கத்துடன் இணைந்த தொழிற்சங்கத்தை வழிநடத்துகிறார், எனவே இந்த ஆண்டு ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பனவு பெற தெருப் போராட்டம் தேவையில்லை என்று கூறினார்.
எவ்வாறாயினும், CEB தனது ஊழியர்களுக்கான எந்தவொரு போனஸையும் அங்கீகரிக்கவில்லை. அடுத்த வருடத்தின் முதல் பாதியில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



