காங்கோ மற்றும் ருவாண்டா இடையே கையெழுத்தான அமைதி ஒப்பந்தம்
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, ருவாண்டா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மூலம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
காங்கோ, ருவாண்டா மோதலை கைவிட்டு அமைதிக்கு திரும்ப ஒப்புக்கொண்டன. இதையடுத்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் முன்னிலையில் காங்கோ, ருவாண்டா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் காங்கோ அதிபர் பெலிக்ஸ் ஷிசெ கெடி, ருவாண்டா அதிபர் பால் ககாமே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை தொடர்ந்து காங்கோவில் உள்ள கனிம வளங்களை அமெரிக்க நிறுவனங்கள் எடுக்க ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இதுவரை யாரும் கண்டிராத அளவில் போர்களை நாங்கள் தீர்த்து வருகிறோம். இதுவரை 8 போர்களை தீர்த்துவிட்டேன். மேலும் இன்னொரு போரை தீர்க்க முயற்சி நடக்கிறது.
அது ரஷியா- உக்ரைன் போர். அதனை நிறுத்த நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
(வீடியோ இங்கே )