கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் : விசாரணையில் வெளிவந்த தகவல்!
#SriLanka
#Canada
Dhushanthini K
8 months ago

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் கனடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையரான அஜந்தன் சுப்ரமணியம் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த இலங்கையர் மேலதிக விசாரணைகளுக்காக பிரான்ஸ் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.



