மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#population
Dhushanthini K
8 months ago

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்காக வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குவதில் அச்சம் தேவையில்லை என மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சில வீடுகள் சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு தகவல் வழங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.



