காற்றழுத்த தாழ்வு பகுதி : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

#SriLanka #Fisherman
Thamilini
11 months ago
காற்றழுத்த தாழ்வு பகுதி : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் நிலவும் தாழ்வு நிலை காரணமாக  பல நாள் மீன்பிடி மற்றும் கடல் கப்பல்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பகுதிகளில் 60 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளதுடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவ மற்றும் கடல்வாழ் மக்களுக்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை