இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவர துணைநிற்கும் அமெரிக்கா!

#SriLanka #AnuraKumaraDissanayake
Thamilini
11 months ago
இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவர துணைநிற்கும் அமெரிக்கா!

இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட பணத்தை மீளக் கொண்டுவருவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தயார் என அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் டொனால்ட் லு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07.12) அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்த அவர், பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார். 

இதன்போது தற்போதைய அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார். 

இதேவேளை, இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அமெரிக்க அரசாங்கம் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான முன்னுரிமைகளைக் கண்டறிந்து புதிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் அமெரிக்க அரசாங்கத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்sதாகவும் அவர் மேலும் கூறினார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை