அரிசி உற்பத்தியாளர்கள் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பதாக குற்றச்சாட்டு -லங்கேஸ்வர பதிலடி!
#SriLanka
Thamilini
11 months ago
தனது அரிசி உற்பத்தி ஆலையை சரிபார்க்குமாறு வர்த்தக அமைச்சரிடம் ஆலை உரிமையாளர் லங்கேஸ்வர மித்ரபால தெரிவித்துள்ளார்.
பாரிய அரிசி உற்பத்தியாளர்கள் கையிருப்புகளை மறைத்து வருவதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், லங்கேஸ்வர மித்ரபால இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், எனது உற்பத்தியை நிரூபித்துக் காட்டுகிறேன். என்னிடம் உள்ள அரிசியின் அளவை நீங்களும் கவனித்துக் கொள்ளுங்கள்." "நாங்கள் எல்லாவற்றையும் வெட்டி இன்று சந்தைக்கு விடவில்லை, ரைஸ் மில்லில் 1000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.