தேங்காய் விலை மேலும் உயரும் அபாயம்!
#SriLanka
Mayoorikka
11 months ago
பல நகர்ப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் தேங்காய் ஒன்றின் விலை 160 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஹபராதுவ நகரிலும் அதனைச் சார்ந்த பிரதேசங்களிலும் தேங்காய் ஒன்றின் விலை 180 ரூபாவாகும். தேங்காய் போதிய கையிருப்பில் இல்லாததால், விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
கொழும்பின் சில பகுதிகளில் தேங்காய் பாரி ஒன்று 100-120 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
தேங்காய் விலை மேலும் உயரும் என்றும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேங்காய் அறுவடை குறைந்ததாலும், தேங்காய் தொடர்பான ஏற்றுமதிக்கு தேங்காய் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், தேங்காய் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது