மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் வெளியாகவுள்ள ரணிலின் அறிக்கை!

#SriLanka
Mayoorikka
11 months ago
மதுபான அனுமதிப்பத்திர விவகாரம் தொடர்பில் வெளியாகவுள்ள ரணிலின் அறிக்கை!

நாடாளுமன்றில் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்டதாக கூறப்படும் மதுபான அனுமதிப்பத்திரம் தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விரிவான விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

 கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் பேச்சாளர் ஒருவர் இவ்வாறு தெரிவித்தார்.

 கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.

 மதுபான அனுமதிப் பத்திரங்களின் பட்டியல் பிமல் ரத்நாயக்கவினால் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை