லண்டனில் புகழ் பெற்ற உணவகத்தில் தேநீர் அருந்திய இரு கின்னஸ் சாதனையாளர்கள்
#Women
#London
#WorldRecord
Prasu
11 months ago
துருக்கியைச் சேர்ந்த 27 வயதான ருமேசா, 215.16 செமீ (7 அடி 1 அங்குலம்) உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 30 வயதான ஜோதி அம்கே, 62.8 செமீ (2 அடி 1 அங்குலம்) உலகின் உயரம் குறைந்த பெண் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
2024 கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடுவதற்காக, உலகின் மிக உயரமான பெண்ணான ருமேசா கெல்கியும், உலகின் உயரம் குறைந்த பெண்ணான ஜோதி அம்கேயும் லண்டனின் புகழ்பெற்ற சவோய் ஓட்டலில் தேநீர் அருந்துவதற்காக சந்தித்தனர்.