யாழ் - சுன்னாகம் சம்பவம் : குற்றமிழைத்த பொலிஸார் பணியிடை நீக்கம்!

#SriLanka #Jaffna
Thamilini
1 year ago
யாழ் - சுன்னாகம் சம்பவம் : குற்றமிழைத்த பொலிஸார் பணியிடை நீக்கம்!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் அராஜக நடவடிக்கையால் குடும்பம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

குற்றமிழைத்த  பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்  பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒருவர் வாகனத்தை விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார்.

அந்த நபரைக் கைது செய்யச் செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதன்படி விசாரணையின் பின்னர் இந்த 04 பொலிஸார் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை