தந்தையின் வாகனத்தில் நசுங்கி உயிரிழந்த குழந்தை : மருதானையில் சம்பவம்!
#SriLanka
Thamilini
1 year ago
மருதானை - புகையிரத குடியிருப்புக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்ட ஜுப் வாகனத்தில் நசுங்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
மருதானை பகுதியில் உள்ள ரயில்வே ஹவுஸில் வசித்து வந்த 03 வயது குழந்தையே உயிரிழந்துள்ளது.
நேற்று (10) பிற்பகல் வீட்டிற்கு அருகில் ஜீப் வண்டியை நிறுத்துவதற்கு தந்தை பின்வாங்கிய போது, பின்னால் வந்த அவரது குழந்தை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.