இந்த வருடம் உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முக்கிய செய்தி
#SriLanka
#Ministry of Education
#Examination
Prasu
9 months ago

2024 GCE உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் நேர அட்டவணைகள் குறித்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் மற்றும் கால அட்டவணைகள் தபால் மூலம் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபாலில் அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்ளாத தனியார் விண்ணப்பதாரர்கள், உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ல் நவம்பர் 18 ஆம் திகதி முதல் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.



