ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்த இரண்டு புதிய தூதுவர்கள்
#SriLanka
#Japan
#Egypt
#AnuraKumaraDissanayake
#Ambassador
Prasu
1 year ago
இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு தூதுவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
எகிப்து அரபுக் குடியரசின் புதிய தூதுவராக Adel Ibrahim அவர்களும், ஜப்பானின் புதிய தூதுவராக ISOMATA Akio அவர்களும், தமது நற்சான்றிதழ்களை கையளித்த பின்னர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் இணைந்து கொண்டனர்.