சட்ட திட்டங்களுக்கு கீழ்படியும் அரசாங்கம் உருவாக்கப்படும்: அனுர

#SriLanka #AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
சட்ட திட்டங்களுக்கு கீழ்படியும் அரசாங்கம் உருவாக்கப்படும்: அனுர

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் தோற்ற பின்னர் பெருமளவு சமையல்காரர்கள் தனக்கு தேவை என வேண்டுகோள் விடுத்தவேளை, அவர் உணவகம் ஒன்றை ஆரம்பிக்கப் போகின்றாரோ என நினைத்தேன் என ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்தார்.

 தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஜனாதிபதி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளிடம் சொகுசு வீடுகள், தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சொகுசு வாகனங்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன.

 நாம் அரசியலை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை தான் தேசிய மக்கள் சக்தி செய்யவுள்ளது. அரசியல் என்பது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கீழ்படிய வேண்டும். அதற்கு மாறாக சட்டத்தை மீறி செயற்பட கூடாது. 

 அப்படி ஒரு நாட்டை தான் தேசிய மக்கள் சக்தி உருவாக்கவுள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை