ஜனாதிபதியின் செயலாளருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு!
#SriLanka
Dhushanthini K
9 months ago

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு, மோசடி மற்றும் ஊழலைக் குறைக்க பிரிட்டிஷ் உள்ளூர் அரசாங்கங்களின் அமைப்பு இரு தரப்பினராலும் விவாதிக்கப்பட்டது.
பிரித்தானிய பாராளுமன்ற பாரம்பரியம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் செயற்பட முடியும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.



