மண் குவியல் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
Dhushanthini K
9 months ago

லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் உள்ள சுரங்கம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவர் மீது மண் குவியல் விழுந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (06) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் ஹத்தோட்டை அமுன பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் உட்பட மேலும் நால்வர் தனியார் காணி ஒன்றில் மாணிக்கக்கல் சுரங்கம் தோண்டிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை லக்கல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



