ட்ரம்பிற்கு வாழ்த்து தெரிவித்தார் ஜனாதிபதி!
#SriLanka
Dhushanthini K
9 months ago

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ 'X' கணக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அமெரிக்காவின் 47வது அதிபராக அதிக வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@realDonaldTrump. இலங்கை மற்றும் அமெரிக்க மக்களுக்கு நன்மை பயக்கும் எங்கள் உறவின் பொதுவான இலக்குகளை அடைய உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.



