முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுக்கும் அரசாங்கம்!
#SriLanka
#Chandrika Kumaratunga
Thamilini
1 year ago
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பாதுகாப்புக் குறைப்பு நடவடிக்கையை அரசாங்கம் மறுத்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், திருமதி குமாரதுங்கவுக்கு 57 அதிகாரிகளின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியது போல் அவரது பாதுகாப்பு 30 ஆக குறைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 180 முதல் 100 வரையிலான பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீர்மானிப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் சமமான முறையில் பாதுகாப்பை வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.