வெலிமடை நோக்கி செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#landslide
Dhushanthini K
9 months ago

ஹலிலெல, வெலிமடை வீதியின் 100 ஆவது கிலோமீற்றர் மின்கம்பத்திற்கு அருகில் மண்சரிவு அபாயம் உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவின் நிலை மோசமாக இருக்கலாம் என்பதால், வீதியில் செல்லும் சாரதிகள் மற்றும் பாதசாரிகள் தங்கள் பாதுகாப்பு குறித்து அவதானமாக இருக்குமாறு பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ. எல். எம். திரு உதய குமார இதனை தெரிவித்துள்ளார்.



