ஜனாதிபதி அனுரவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத்தாள்!
#SriLanka
#Sri Lanka President
#money
#AnuraKumaraDissanayake
Mayoorikka
9 months ago

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அதுருகிரிய கொரத்த பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.



