அரசியல் அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டும் - ரணில்!
#SriLanka
#Ranil wickremesinghe
Thamilini
1 year ago
பொதுத்தேர்தலில் அரசியல் அனுபவமுள்ளவர்கள் பாராளுமன்ற பிரதிநிதிகளாக நியமிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் நாடு மீண்டும் ஒரு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசாங்கத்தில் அனுபவமுள்ளவர்கள் இல்லை. இரண்டு வருடங்களில் வேறு யாரும் இல்லாதபோது, அவர்கள் எனக்கு உதவினார்கள் எனவும், சில அனுபவமில்லாதவர்கள் எல்லாம் படித்துக் கொண்டு வரச் சொல்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.