சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொகான் ரத்வத்த!

#SriLanka
Dhushanthini K
9 months ago
சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் லொகான் ரத்வத்த!

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் அசெம்பிள் செய்யப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லோகன் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

 மிரிஹான பொலிஸாரால் திரு.லோகன் ரத்வத்த கடந்த 31ஆம் திகதி கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

 அன்றிரவு மிரிஹான பொலிஸ் நிலையத்தில் இருந்து நுகேகொட பதில் நீதவான் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்ட அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், நுகேகொடை பதில் நீதவான் லொஹான் ரத்வத்தவை சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலைக்கு செல்ல அனுமதி வழங்கியிருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!