பொதுத் தேர்தல் : 1259 முறைப்பாடுகள் பதிவு!
#SriLanka
#Election
Dhushanthini K
9 months ago

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1259 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 123 புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பெறப்பட்ட மொத்த புகார்களில் வன்முறை தொடர்பான 13 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
எனினும், மொத்தமுள்ள 1259 புகார்களில் 1018 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.



