ரயில் தாமதம் மற்றும் இரத்து தொடர்பில் உரிய தீர்வை வழங்க வேண்டும்!
#Train
Dhushanthini K
8 months ago

இந்த ஆண்டில் 86 முறை ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ல் 139 தடம்புரண்டு விபத்துகள் நடந்துள்ளதாக ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், 2022ல் பதிவு செய்யப்பட்ட ரயில் தடம் புரண்ட சம்பவங்களின் எண்ணிக்கை 132 ஆகும்.
இதேவேளை, தொடரும் ரயில் தாமதம் மற்றும் ரயில் ரத்துச் சம்பவங்கள் தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்க நிர்வாகம் தவறினால், அதற்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரின் தலையீட்டில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற உள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.



