குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்: அனுரவிற்கு சவால் விடுத்துள்ள நாமல்
#SriLanka
#Namal Rajapaksha
#AnuraKumaraDissanayake
Mayoorikka
1 year ago
உகண்டா மற்றும் ஏனைய நாடுகளில் ராஜபக்ச ஆட்சி பல பில்லியன் டொலர்களை மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சுமத்தியுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது திசாநாயக்கவின் காணொளி ஒன்றுக்கு பதிலளித்த நாமல், ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல வருடங்களாக பொது நிதி திருடப்பட்டதாக கூறி வருகின்றனர்.
“ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக நாங்கள் உகண்டாவிலும் பல்வேறு நாடுகளிலும் பில்லியன் கணக்கான டொலர்களை பதுக்கி வைத்துள்ளோம் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய நேரம் இது” என்று ராஜபக்ச 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.