இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் : முக்கிய கலந்துரையாடல் இன்று!

#SriLanka #IMF
Thamilini
1 year ago
இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் : முக்கிய கலந்துரையாடல் இன்று!

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02.10) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. 

 இதன்படி, நிதி நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர் எதிர்வரும் ஒக்டோபர் 04ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்க உள்ளனர். 

 அவர்கள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர். 

 இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!