காசா போர் : அமெரிக்காவின் விதிமுறைகளை நிராகரிக்கும் ஹமாஸ்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
11 months ago

காஸாவில் நடைபெற்று வரும் போர் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த போர் நிறுத்த விதிமுறைகளை ஹமாஸ் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக கத்தாரில் இரண்டு நாள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அங்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை ஹமாஸ் நிராகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தலைமையில் பல நாடுகள் இந்த கலந்துரையாடல்களில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அடுத்த வார இறுதியில் மற்றுமொரு கலந்துரையாடலுக்காக இஸ்ரேலுக்கு செல்ல அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



