தபால் மூல வாக்காளர்கள் குறித்து வௌியான தகவல்!

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
தபால் மூல வாக்காளர்கள் குறித்து வௌியான தகவல்!

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 736,589 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 அதில், 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

 எதிர்வரும் 26ஆம் திகதி தபால் மூல வாக்களிப்பிற்கான வாக்குச் சீட்டுக்கள் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் மூன்று நாட்களுக்கு தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!