ஜனாதிபதி வேட்பாளார் அரியநேந்திரன் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஜனாதிபதி வேட்பாளார் அரியநேந்திரன் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்!

ஜனாதிபதி வேட்பாளார் அரியநேந்திரன் இன்றையதினம் (18.08) மாலை 3 மணியளவில் முள்ளிவாய்க்காலில் பொதுச்சுடர் ஏற்றி ஜனாதிபதி தேர்த்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தினை ஆரம்பித்து வைத்துள்ளார்.  

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக மக்கள் மத்தியில் பிரச்சார நடவடிக்கைகளை உத்தியோக பூர்வமாக முன்னெடுத்து வருகின்றனர்.  

இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுதூபிக்கு பொது சுடரேற்றி வழிபட்டு தமிழ் மக்கள் சார்ந்து தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர் அரியநேந்திரன் மற்றும் அவரோடு இணைந்து உறுப்பினர்கள் தேர்தலுக்கான முதலாவது பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர்.  

குறித்த அஞ்சலியின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி, சமூக செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!