இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு அதிகரிக்கும்!
#SriLanka
#Central Bank
#economy
Mayoorikka
1 year ago
அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையில் இலங்கையின் பணவீக்கம் எதிர்பார்த்த இலக்கை விடவும் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணயக் கொள்கை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் பணவீக்கம் 1.7 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக அதிகரித்தது.
இந்த வருடத்தின் இறுதியில் இலங்கையின் பொருளாதாரம் 3 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது.