34 கட்சிகள் இணைந்து ரணிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
1 year ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், இயலும் இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
இதில் 34 கட்சிகள் மற்றும் கூட்டணிகள் கைச்சாத்திட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வானது கொழும்பு வோர்டஸ் எஜ் விடுதியில் இடம் பெற்றது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ந்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளனர்.